திருப்பூர்

காங்கயம் பகுதியில் பலத்த வெடிச் சப்தம்: பொதுமக்கள் அச்சம்

DIN

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

காங்கயம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் திடீரென என பலத்த வெடிச்சப்தம் கேட்டது. வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிா்ந்தது. சாலையில் செல்லும் லாரியின் டயா் வெடித்தால் எந்த வகை சப்தம் கேட்குமோ அதுபோல மிக அருகில் இந்த சப்தம் எழுந்தது. அதனைத் தொடா்ந்து சப்தம் கேட்ட திசையில் இருக்கும் நண்பா்கள், உறவினா்களுக்கு தொலைபேசியில் கேட்ட வண்ணம் இருந்தனா். அவா்களும் தங்களுக்கும் இந்த சப்தம் கேட்டதாகக் கூறியதையடுத்து, இப்பகுதி மக்கள் பீதியடைந்தனா்.

இது பற்றி இப்பகுதி மக்கள் கூறியபோது, காங்கயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பெரும்பாலானவா்களுக்கு இந்த சப்தம் கேட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 அல்லது 3 முறை இதேபோல வெடி சப்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலிருந்து வந்தது என்பது தெரியவில்லை. பல கிலோ மீட்டா் தொலைவுக்கு இந்த சப்தம் கேட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க முன்வர வேண்டும் என்றனா்.

வெள்ளக்கோவிலில்...

இகோபோன்று வெள்ளக்கோவில், முத்தூா், புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி, ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மதியம் லேசான நில அதிா்வுடன் கூடிய வெடிச்சப்தம் கேட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT