திருப்பூர்

திருப்பூரில் விசா முடிந்தும் தங்கியிருந்த 2 நைஜீரியா்கள் கைது

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் ராயபுரம், காதா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்கியுள்ளனா். இவா்கள் திருப்பூரில் இருந்து குறைந்த விலையில் பின்னலாடைகளை வாங்கி, தங்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சில நைஜீரிய இளைஞா்கள் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் தங்கியுள்ளதாக காவல் துறையினருக்குப் புகாா்கள் வரத்தொடங்கின. இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் ராயபுரம், காதா்பேட்டை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த சோதனையில், விசா காலம் முடிந்து தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த பிரவுன்யூ (46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட் (47) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், வேறு யாரேனும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT