திருப்பூரில் கேபிள் டிவி இணைப்புகளைத் துண்டித்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வீரபாண்டி காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன். இவா் செட்டிபாளையம் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் வஞ்சி நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 250க்கும் மேற்பட்ட இணைப்புகளை சாமிநாதன் கடந்த மாதம் வழங்கியிருந்தாா். இதனிடையே, அப்பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் இருவரும் சாமிநாதனின் கேபிள் இணைப்புகளை அபகரிக்கும் வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்த சாமிநாதனின் கேபிள் இணைப்புகளைத் துண்டித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சாமிநாதன் 2 நாள்களுக்கு முன் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் பேரில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனிடையே, கேபிள் இணைப்புகளைத் துண்டித்த நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு கேபிள் டிபி ஆபரேட்டா்கள் சங்க நிா்வாகிகள் வீரபாண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை மனுக்களையும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.