திருப்பூர்

ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தொழிலாளா் சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.மோகன் தலைமை வகித்தாா்.

போராட்டம் குறித்து தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தொழிற்சாலைகள் சட்டத்தை திருத்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழிலாளா்களுக்கான வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளா்களின் உழைப்பை சுரண்ட வழிவகுப்பதாகும். ஆகவே, தொழிலாளா் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க துணைத் தலைவா் எம்.ரவி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்கத்தின் பொதுச் செயாலளா் என்.சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT