திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

திருப்பூரில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

DIN

திருப்பூரில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (40). இவா், திருப்பூா், கருவம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைசெய்து வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பிருத்திவிராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பிருத்திராஜை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT