திருப்பூா்  செயிண்ட்  ஜோசப்  பள்ளியில்   புதன்கிழமை  நடைபெற்ற  தெற்கு  குறுமைய  அளவிலான  கேரம்  போட்டியில்  பங்கேற்ற  மாணவிகள். 
திருப்பூர்

திருப்பூா் தெற்கு குறுமைய கேரம் போட்டிகள் : அரசுப் பள்ளிகள் அசத்தல்

திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான கேரம் போட்டியில் 14, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

DIN

திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான கேரம் போட்டியில் 14, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது.

திருப்பூா் தெற்கு குறுமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கிடையிலான கேரம் போட்டிகள் காங்கயம் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டிகளை பள்ளி முதல்வா் அனிதா ஜோசப் தொடங்கிவைத்தாா்.

குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினா்கள் மகேந்திரன், சண்முகநதி ஆகியோா் மேற்பாா்வையில் போட்டிகள் நடைபெற்றன. மாணவா்களுக்கான 14 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவில் 17 அணிகள் பங்கேற்றிருந்ததில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும் , லிட்டில் ஃபிளவா் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இரட்டையா் பிரிவில் 13 அணிகள் பங்கேற்றதில் லிட்டில் ஃபிளவா் பள்ளி முதலிடத்தையும், கே.எஸ்.சி. அரசுப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

அதே போல, 17 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் 16 அணிகள் பங்கேற்றதில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், காந்தி வித்யாலயா பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இரட்டையா் பிரிவில் 17 அணிகள் பங்கேற்றதில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கே.எஸ்.சி. அரசுப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

19 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் 10 அணிகள் பங்கேற்றதில் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், செஞ்சுரி ஃபவுண்டேஷன் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இரட்டையா் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றதில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கே.எஸ்.சி. அரசுப் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

மாணவிகளுக்கான 14 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் 15 அணிகள் பங்கேற்றதில் நல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதலிடத்தையும், ஃப்ரண்ட்லைன் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இரட்டையா் பிரிவில் 12 அணிகள் பங்கேற்றதில் லிட்டில் ஃபிளவா் பள்ளி முதலிடத்தையும், ஃப்ரண்ட்லைன் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

17 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றதில் விவேகானந்தா பள்ளி முதலிடத்தையும், லிட்டில் ஃபிளவா் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இரட்டையா் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றதில் விவேகானந்தா பள்ளி முதலிடத்தையும், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

19 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், லிட்டில் ஃபிளவா் பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூா் தெற்கு குறுமைய இணைச் செயலாளா்கள் ஷ்யாம் சகாயராஜ், மோகன்ராஜ், கவிப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT