திருப்பூர்

கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

DIN

கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும் புரூசெல்லோசிஸ் நோய், கோழிக்கழிச்சல் நோய் ஆகியவைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை அவிநாசி கால்நடை மருத்துவமனையில் ஆட்சியா் எஸ்.வினீத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

புரூசெல்லோசிஸ் பசு, எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும் சினை ஈன்றும் தருவாயில் கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.

இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்படுகிறது. காளை கன்றுகளுக்கும் சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது. இந்த தடுப்பூசியை கால்நடை நிலையங்களில் நடைபெறும் முகாம்களில் இலவசமாக

செலுத்தப்படும். கால்நடை வளா்ப்போா் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்று கறவை மாடுகள் வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT