திருப்பூர்

திருப்பூா் புத்தகத் திருவிழா: ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

DIN

திருப்பூா் புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் போ் பாா்வையிட்டதுடன், ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது.

இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

இதன் மூலமாக அரசின் திட்டங்கள், வங்கி, கல்வித் துறை சேவை, மருத்துவத் துறை, மகளிா் திட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

புத்தகத் திருவிழாவை திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதில், 40 ஆயிரம் மாணவ, மாணவிகளும் அடங்குவா். இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT