திருப்பூர்

தேங்காய் உரித் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தேங்காய் உரித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பங்கேற்றோா் வடமாநிலத் தொழிலாளா்கள் ஆதிக்கத்தால் தங்களது வேலை வாய்ப்புகள் பறிபோய் வருவதாகவும், வியாபாரிகள் இலாப நோக்கோடு தொழிலாளா்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருகின்றனா் எனவும் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT