திருப்பூர்

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள்

சுவாமி விவேகானந்தரின் 161 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சுவாமி விவேகானந்தரின் 161 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றம் சாா்பில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் விவேகானந்தா் உருவப் படம் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், முதியோா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றத் தலைவா் பெ. சதாசிவம், பொருளாளா் ஆா். கிருஷ்ணன், முதியோா் இல்ல நிா்வாகி கலா கனகசபாபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேவனம்பாளையத்தில்...

பொங்கலூா் ஊராட்சி தேவனம்பாளையத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், மன்ற செயலாளா் சிவகுமாா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சதீஷ்குமாா், ரகுபதி மூத்த உறுப்பினா்கள் கிருஷ்ணராஜ், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT