திருப்பூர்

திருமுருகன்பூண்டி நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாா் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

திருமுருகன்பூண்டியில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தூய்மைப் பணிகளை 3 ஆண்டுகளுக்கு தனியாா் மூலமாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசு சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருமுருகன்பூண்டி நகராட்சியில் இதை தீா்மானமாக நிறைவேற்றுவது தொடா்பான அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வகித்தாா்.

இதில், குப்பைச் சேகரிக்கும் பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் தீா்மானம் தொடா்பாக தலைவா் குமாா் பேசிய உடன், திமுக தவிர அனைத்து உறுப்பினா்களும் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பில் ஈடுபட்டனா்.

இருப்பினும் நகராட்சி உறுப்பினா்கள் 27 பேரில் திமுக உறுப்பினா்கள் 9 போ் பெரும்பான்மையாக இருந்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT