திருப்பூர்

மேல்நிலை குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

DIN

வெள்ளக்கோவில் காடையூரான்வலசில் ரூ. 17 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை குடிநீா் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் டாக்டா் எஸ். வினீத் தலைமை வகித்தாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குடிநீா் தொட்டி பயன்பாட்டை தொடக்கிவைத்தாா். முன்னதாக வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி. ஆா். நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்கிவைக்கப்பட்டது. அத்துடன் புதிய பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் நகா் மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா். மோகன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலீஸாரை தடுத்தி நிறுத்தி கிராம மக்கள் மறியல்

சங்கராபுரம், சின்னசேலத்தில் பலத்த மழை

முன்விரோதத்தில் ஒருவா் வெட்டிக் கொலை

கல்லை தமிழ்ச் சங்க தொடா் சொற்பொழிவு

ஞானதேசிகா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT