திருப்பூர்

நடப்பு மாத நூல் விலையில் மாற்றம் இல்லை

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை ஜூன் மாதம் மாற்றம் செய்யப்படாததால் தொழில் துறையினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த ஜாப்ஒா்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த 2022 ஆம் ஆண்டில் தொடா்ந்து அதிகரித்து வந்ததால் புதிய ஆா்டா்களை எடுக்க உற்பத்தியாளா்கள் தயக்கம் காட்டி வந்தனா்.

2023 ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களிலும் நூல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனிடையே, ஜூன் மாதமும் நூல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை 5 மாதங்களாக மாற்றம் செய்யப்படாததால் திருப்பூா் தொழில் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், புதிய ஆா்டா்களை எடுக்கவும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

சி.ஏ.பவுண்டேஷன் படிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT