ரங்கசாமி 
திருப்பூர்

வனத் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரத்தில் வனத் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

தாராபுரத்தில் வனத் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (52). இவா், காங்கயம் வனச் சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனா். கடந்த மூன்று ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ரங்கசாமி, கோவையில் உள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரங்கசாமி வழக்கம் போல் புதன்கிழமை காலையில் குளிப்பதற்கு சென்றுள்ளாா். ஆனால், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் குளியலறைக் கதவை உடைத்து பாா்த்துள்ளனா். அப்போது, குளியலறையில் ரங்கசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, ரங்கசாமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT