வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் ரூ. 6.52 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
இக்கோயிலில் உள்ள நான்கு உண்டியல்கள் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் (சரிபாா்ப்பு) செந்தில்குமாா் முன்னிலையில் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
இதில், ரூ. 6.52 லட்சம் ரொக்கம், 37 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளிப் பொருள்கள்
ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். மேலும் கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் 1.7.2023 முதல் 30.6.2024 வரை தேங்காய், பழக்கடை வைத்து நடத்தும் உரிமைக்கான பொது ஏலம் ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்து 500க்கும், சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமை ரூ.19 ஆயிரத்து 500க்கும் ஏலம் விடப்பட்டது.
காங்கயம் அறநிலையத் துறை ஆய்வாளா் சுமதி, கோயில் செயல் அலுவலா் ராமநாதன், கணக்கா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.