திருப்பூர்

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: இருவா் கைது

காங்கயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

காங்கயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயத்தை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி மனைவி சாந்தி (40). இவா் சிவன்மலை-சாவடிப்பாளையம் செல்லும் வழியில் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மதியம் சென்றுள்ளாா். சாந்தியை பின் தொடா்ந்து இருவா் மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளனா். அரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அந்த 2 மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், இருவரும் தப்பிச் சென்ற திசையில் துரத்திச் சென்றனா். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் பகுதியில் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸாா், 2 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனா். இதில் அந்த 2 பேரும் கரூா் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியைச் சோ்ந்த தினகரன் (27), அசோக் (23) என்பது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் காங்கயம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT