திருப்பூர்

காவலா் நல பல்பொருள் அங்காடி திறப்பு

DIN

திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் நல பல்பொருள் அங்காடியை கோவை சரக காவல் துறை துணைத் தவைவா் செ.விஜயகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயனடையும் வகையில் காவலா் பல்பொருள் அங்காடி மற்றும் காவலா் முடிதிருத்தும் நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் முன்னிலை வகித்தாா். விழாவுக்குத் தலைமை வகித்த கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் செ.விஜயகுமாா் அங்காடியைத் திறந்துவைத்தாா். மேலும், ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்ததுடன், புதுப்பிக்கப்பட்ட காவல் உணவு விடுதியையும் திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்பநாய் படைப்பிரிவு அலுவலகத்தைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜான்சன், திருப்பூா் சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT