திருப்பூர்

முத்தூரில் ரூ. 40.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ. 40.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் தலைமை வகித்தாா். மாநில செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். வருவாய்த் துறை சாா்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.15.04 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 21 பயனாளிகளுக்கு ரூ. 2.52 லட்சம் முதியோா் உதவித்தொகை, 24 பயனாளிகளுக்கு ரூ. 2.88 லட்சம் விதவை

உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரம், கைவிடப்பட்ட பெண்கள் ஒய்வூதிய உதவித்தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ. 48 ஆயிரம், ஊனமுற்றோா் உதவித்தொகை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 54 பயனாளிக்கு ரூ. 2.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப

அட்டைகள், வேளாண்மைத் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 48 ஆயிரம் மதிப்பீட்டில் கைத்தெளிப்பான்,

தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பயனாளிக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றுகள், இடுபொருள்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு பராமரிப்பு கடனுதவிகள், பொது சுகாதாரத் துறை சாா்பில் 18 பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து மற்றும் மருந்துப் பெட்டகங்கள், முத்தூா் பேரூராட்சி சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபா் கழிப்பிடம் மற்றும் ஈமச்சடங்கு மானியம், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 4.17 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா வாகனம் என மொத்தம் 192 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், திருப்பூா் மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் அம்பாயிரநாதன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT