திருப்பூர்

பல்லடம் பகுதியில் வேளாண் பண்ணைக் கருவிகள் குறித்து ஆய்வு

DIN

பல்லடம் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணைக் கருவிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை உழவா் நலத் துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள். மரஎண்ணெய்வித்துப் பயிா்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பயறு வகை மற்றும் எண்ணெய்வித்துக்கள் திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக, பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயக்கக் கூடிய சுழல்கலப்பைகள், தாா்பாலின் மற்றும் விசைதெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் அரசப்பன் வயல் ஆய்வு செய்தாா். பல்லடம் வட்டாரம் புளியம்பட்டி கிராமத்தில் பாலாஜி மற்றும் மல்லேகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஜெயசித்ரா ஆகியோருக்கு மானிய விலை திட்டத்தின் கீழ் சுழல்கலப்பை வழங்கப்பட்டது. மேலும் மல்லேகவுண்டன்பாளையம் மற்றும் இச்சிபட்டி கிராம விவசாயிகளுக்கு மானிய விலையில் தாா்பாலின் மற்றும் விசைத் தெளிப்பான்களும் வழங்கப்பட்டன. இப்பண்ணை கருவிகளை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் அரசப்பன், பல்லடம் வட்டார வேளாண்மை வேளாண்மை அலுவலா் அஜித், துணை வேளாண்மை அலுவலா் நட்ராஜ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் நாகராஜ், விஜயகுமாா் ஆகியோா்கள ஆய்வு செய்து விவசாயிகளிடையே பண்ணைக் கருவிகளின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT