பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வெள்ளக்கோவிலை அடுத்த புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி மாணவி பிரீத்தா 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தாா். இவா் தமிழில் 99, ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 97, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவிகள் காவியா 485, அங்குஹா்ஷிதா 480 மதிப்பெண்களுடன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பெற்றனா். மாணவிகள் கௌசல்யா, தருணிகா 478 பெண்களும், மாணவி மித்ரா 477 மதிப்பெண்களுடன் முறையே 4, 5 ஆம் இடத்தைப் பிடித்தனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தாளாளா் பரிமளம் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.