திருப்பூர்

குண்டடம் அருகே சேதமடைந்த 4 வழிச்சாலை நடைபாதை

குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆன நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆன நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச் சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT