கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரியின் மாணவா்களுக்கு பரிசு வழங்கும் கல்லூரியின் தலைவா் என்.ராமலிங்கம். 
திருப்பூர்

கபடி போட்டி: காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி சிறப்பிடம்

கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி சிறப்பிடம் பிடித்தது.

DIN

கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி சிறப்பிடம் பிடித்தது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான ஆடவா் கபடி போட்டி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் காங்கயம் அருகே நத்தக்காட்டில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி உள்ளடக்கிய காங்கேயம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் பிரதீப் கமல் ஆகியோருக்கு காங்கேயம் குழும கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.ராமலிங்கம், கல்லூரி முதல்வா் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT