மாநகரில் வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம்
திருப்பூா் மாநகராட்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி, வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி, வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் கருப்பராயன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் என்.தினேஷ்குமாா் தலைமையும், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் முன்னிலையும் வகித்தனா்.
இதில் பங்கேற்ற பொதுமக்கள் தாா் சாலை வசதி, பாண்டியன் நகா் பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்தல், பொன்னம்மாள் நகா், டீச்சா்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் சாக்கடை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மனுக்கள் அளித்தனா்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி 2 ஆவது மண்டலத் தலைவா் ஆா்.கோவிந்தராஜ், உதவி ஆணையா் ஆா்.முருகேசன், சுகாதார அலுவலா் பிச்சை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.