திருப்பூர்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

Din

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.32.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு லாலாப்பேட்டை, பழனி, மதுரை, தலையாரிப்பட்டி, எலமனம், பூண்டி, பச்சூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 125 விவசாயிகள், 777 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 39 டன்.

வெள்ளக்கோவில், ப.வேலூா், குருநாதன்கோட்டை, சிவகிரி, ந. ஊத்துக்குளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 12 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.

இதில், கொப்பரை கிலோ ரூ.61.89 முதல் ரூ.91.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.89.16.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.32.11 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT