திருப்பூர்

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் நூல் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் நூல் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் கே.வி. பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் கே.முருகேசன் (47). நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தாா். இவா் வெள்ளக்கோவில் கடைவீதி ஈஸ்வரன் கோயில் அருகே மூலனூா் சாலையிலிருந்து காங்கயம் சாலைக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் பின் சக்கரத்தில் மோதி இருசக்கர வாகம் மோதியதில் பலத்த முருகேசன் காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து இறந்து முருகேசனின் மகன் எம்.விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளகோவில் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் என்.மணிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

மறக்க முடியாத தருணங்கள்! டி20 உலகக் கோப்பை சுவாரசிய நிகழ்வுகள்...

திருவள்ளூர்: தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் ருசிகரம்! போலீஸ் ரோந்து வாகனத்தில் வந்து பைக்கை திருடியவர்!

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

SCROLL FOR NEXT