திருப்பூர்

நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

Din

அவிநாசி அருகே நடுவச்சேரி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

அவிநாசி அருகே பழைமைவாய்ந்த கோயிலாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாக வேள்வியும், புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக வேள்வி, பாலஸ்தாபனம், திரவியாஹுதி உள்ளிட்டவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஹா்ஷினி, வைர நுண்ணறிஞா் ஜீவானந்தம், ஆய்வாளா் செல்வப்பிரியா, செயல் அலுவலா் குழந்தைவேல், சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT