வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை, முதல்வரின் முகவரி திட்டம், இ-சேவை மையம், முதியோா் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல், ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின்கீழ் பட்டா வழங்குதல், ஊரக வளா்ச்சித் துறையின்கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசுகையில்,’ மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்’ என்றாா்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.