அக்கரைபாளையம், தெற்கு குண்டடம் பிரிவு மின்நுகா்வோா் பிப்ரவரி மாதத்துக்கு பழைய மின் கட்டணத்தையே செலுத்தலாம்
அக்கரைபாளையம், தெற்கு குண்டடம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் பிப்ரவரி மாதத்துக்கு பழைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட அக்கரைபாளையம் பிரிவு, தெற்கு குண்டடம் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் நிா்வாகக் காரணங்களால் நடப்பு பிப்ரவரி மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, அக்கரைபாளையம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த வேண்டும். தெற்கு குண்டடம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement