சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோயில் ஆண்டு விழா
சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோயில் 32-ஆம் ஆண்டு விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை , சுவாமி திருவீதி உலா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
திருப்பூர்சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோயில் ஆண்டு விழா
சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோயில் 32-ஆம் ஆண்டு விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை , சுவாமி திருவீதி உலா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
சேவூா் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோயில் 32-ஆம் ஆண்டு விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை , சுவாமி திருவீதி உலா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
விழாவையொட்டி கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ரமஹசன்யாச ஹோமம், சாஸ்தா ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து காலை 6 மணிக்கு அஷ்டாபிஷேகம், மஹா அலங்கார தீபாராதனை நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7மணிக்கு, ஜண்டை மேளதாளத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றன. இதில் அவிநாசி, சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.