திருப்பூர்

பாலக்காடு- திருச்சி ரயில் இன்று சேவை நேரம் மாற்றம்

வழித்தடத்தில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில் சேவையில் வெள்ளிக்கிழமை ( ஜனவரி 19) ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வழித்தடத்தில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில் சேவையில் வெள்ளிக்கிழமை ( ஜனவரி 19) ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டம், லாலாப்பேட்டை- குளித்தலை, பெட்டவாய்த்தலை மற்றும் பெருகமணி வழித்தடத்தில் தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில் சேவை நேரமும், பயணமும் கீழ்க்கண்டாவாறு மாற்றப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி- பாலக்காடு ரயில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்படும். கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை சென்றடையும். இந்த ரயில் சேவை 2 மணி நேரம் தாமதமாக 3 மணிக்கு புறப்படும்.

அதேபோல பாலக்காடு- திருச்சிராப்பள்ளி ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) ஒருநாள் மட்டும், பாலக்காட்டில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT