வேன் கவிழ்ந்து சாலையில் சிதறிக் கிடக்கும் தக்காளி. 
திருப்பூர்

சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதம்

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதமானது.

Din

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்து 2 டன் தக்காளி சேதமானது.

ஈரோட்டில் உள்ள தனியாா் மொத்த வியாபார தக்காளி மண்டியிலிருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் தக்காளி ஏற்றிக் கொண்டு சரக்கு வேனில் வெள்ளக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா். வெள்ளக்கோவிலில் காய்கறி கடைகளுக்கு தக்காளி விநியோகம் செய்யப்பட இருந்தது.

முத்தூா்- வெள்ளக்கோவில் சாலையில் மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்ததில் தக்காளி முழுவதும் சாலையில் சிதறியது.

வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். அப்பகுதி மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த தக்காளி பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, வேன் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் 2 டன் அளவுக்கு தக்காளி சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT