திருப்பூர்

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

Din

தாராபுரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

தாராபுரம், காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இவருக்கு மனைவி, 3 வயதில் குழந்தை உள்ளனா்.

பிரகாஷ், தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்

இந்த நிலையில், பிரகாஷ், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டி, விளையாடி வந்துள்ளாா். இதில் அவா் கட்டிய அனைத்து பணமும் பறிபோனதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், தனது வீட்டில் விஷ விதையை அரைத்துக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எந்தவொரு பிர்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவா்கள், இளைஞா்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும் நோக்கில் 104 சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT