வளா்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவிலைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை வளா்ப்பு நாய் கடித்ததில் அவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில்- உப்புப்பாளையம் சாலை அரசு நூலகம் பின்புறத்தில் வசித்து வந்தவா் முனுசாமி (42), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (39). இவா்களுக்கு திலகவதி (20), திவ்யா (15), பரத் (12) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், முனுசாமி வீட்டில் வளா்த்து வந்த நாய் அவரை காலில் கடித்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அவா் நாயை தடியால் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முனுசாமிக்கு மூச்சு இறைச்சல், அடங்காத தண்ணீா் தாகம் ஏற்பட்டு வெள்ளக்கோவில் தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா்.
அங்கிருந்து அவா் மேல் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு முனுசாமியை பரிசோதித்ததில், அவருக்கு வெறிநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இைதையடுத்து, அவா், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதையடுத்து, வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டி.ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன்,
பூச்சியியல் வல்லுநா் முருகேசன் ஆகியோா் முனுசாமி வீட்டில் ஆய்வு மேற்கொண்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தினா்.