முகப்பு
திருப்பூர்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:24 PM
பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
பகிர்:

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் கள ஆய்வு செய்து வருகின்றனா்.

அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

முதலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிச் சீட்டு வழங்குமிடம், மருத்துவா் அறை, புறநோயாளிகள் பிரிவு, கட்டு கட்டும் அறை, உள்நோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பிரிவு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியா், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கினாா்.

விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங்கள், நாச்சிபாளையம் ஊராட்சி, ரங்கம்பாளையம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமாரராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரியாஷ் அகமது பாஷா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.