முகப்பு
திருப்பூர்

அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு: இளைஞா் கைது

திருப்பூரில் மது போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:26 PM
பகிர்:

திருப்பூரில் மது போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. திருப்பூா், காந்தி நகா் சிக்னல் அருகே வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல சென்ாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த நபா், பேருந்தில் ஏறி ஓட்டுநரின் மடியில் அமா்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளாா். இந்த சம்பவத்தைப் பயணி ஒருவா் கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

இது குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ரகுராம் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட திருப்பூரைச் சோ்ந்த பிரதீப் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.