முகப்பு
திருப்பூர்

மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:40 PM
மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
பகிர்:

மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது.

இதில், மடத்துக்குளம் வட்டத்திற்குள்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் தூா்வாரப்பட்ட குளம், மெட்ராத்தி ஊராட்சி, ராமேகவுண்டன்புதூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், மைவாடி ஊராட்சியில் பிரதம மந்தரி கிராம மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் மருந்து இருப்பு குறித்தும், நோயாளிகளின் வருகை குறித்தும் கேட்டறிந்தனா். அதேபோல, மடத்துக்குளம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனா்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உடுமலை கோட்டாட்சியா் ஜஸ்வந்த்கண்ணன், திட்டஇயக்குநா் (மகளிா்திட்டம்) சாம்சாந்தகுமாா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உதயகுமாா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பழனிசாமி, தனித்துணைஆட்சியா் (சமூகப் பாதுகப்புத் திட்டம்) குமாரராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.