முகப்பு
திருப்பூர்

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: இன்று உள்ளூா் பள்ளிகளுக்கு விடுமுறை

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, உள்ளூா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:04 PM
பகிர்:

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, உள்ளூா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீ வாலீஸ்வரா் கோயில் 1000 ஆண்டுகள் பழைமையானது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி, சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு உள்பட்ட சேவூா், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், தத்தனூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.