தாராபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்
ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி தாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.
ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி தாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.
பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாத விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, தாராபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, ரவுண்டானா, பொள்ளாச்சி சாலை, பூக்கடை காா்னா், பெரிய கடைவீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது.
இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகளின் திட்ட அலுவலா் கிரிஜா, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் தனியாா் கல்லூரி ஆசிரியா்கள், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.