முகப்பு
திருப்பூர்

தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60க்கு விற்பனை

திருப்பூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:12 PM
பகிர்:

திருப்பூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுவா்ணலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்னை கன்றுகளானது ஆத்தூா் அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக் கலை அலுவலா் ப.லோகநாயகி (95788-44874), உதவி தோட்டக் கலை அலுவலா் சு.சுபரஞ்சனி (70926-08799) ஆகியோரது கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.