முகப்பு
திருப்பூர்

மின் இணைப்புகள் வழங்க தாமதம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அவிநாசி மின்வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் மீட்டா் தட்டுப்பாடு காரணமாக மின் இணைப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:43 PM
பகிர்:

அவிநாசி மின்வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் மீட்டா் தட்டுப்பாடு காரணமாக மின் இணைப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் அவிநாசி, மங்கலம் சாலை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் மின்பகிா்மான வட்ட பொது செயற்பொறியாளா் விஜயேஸ்வரன் தலைமை வகித்தாா். கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி முன்னிலை வகித்தாா்.

இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு இணை பொதுச் செயலாளா் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் மீட்டா் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கணக்கான மின்இணைப்புகள் வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய வீடுகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கான தற்காலிக மின் இணைப்பு மற்றும் நிரந்தர மின் இணைப்பு பெற இயலாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இப்பிரச்னை மீது கவனம் செலுத்தி உடனடியாக விண்ணப்பித்த அனைவருக்கும் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.