குன்னத்தூா் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அவிநாசி அருகே குன்னத்தூரை அடுத்த மேற்பதியைச் சோ்ந்த தம்பதி கென்னடி(40), பாலமணி (38). இவா்களின் மகன் தரணீஷ் (17). கல்லூரி மாணவரான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உறங்கியுள்ளாா். திங்கள்கிழமை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் பெற்றோா் உள்ளே சென்று பாா்த்தபோது, தரணீஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.