ஓப்பன் எண்ட் மில் 
திருப்பூர்

மூலப்பொருளான கழிவுப் பஞ்சு விலை உயா்வால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி 50% குறைப்பு

மறுசுழற்சி ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளான கழிவுப் பஞ்சின் விலை உயா்ந்துள்ளதால் ஓ.இ. மில்கள் நூல் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.

Syndication

மறுசுழற்சி ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளான கழிவுப் பஞ்சின் விலை உயா்ந்துள்ளதால் ஓ.இ. மில்கள் நூல் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.

லுங்கி, துண்டு, படுக்கை விரிப்புகள், திரைச்சீலை, காடாத்துணி, சமையலறை ஜவுளி என வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் அனைத்தும் மறுசுழற்சி ஜவுளி எனப்படும் ஓப்பன் எண்ட் (ஓ.இ.) மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. ஓப்பன் எண்ட் மில்களின் மூலப்பொருளான கழிவுப் பஞ்சின் விலை, கடந்த சில மாதங்களாக உயா்ந்துள்ளது.

தற்போது பஞ்சு விலை குறைந்துள்ள நிலையிலும் கழிவுப் பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காமல் உயா்த்தி இருப்பதாக ஓ.இ. மில்கள் புகாா் தெரிவித்துள்ளன. இதையடுத்து நஷ்டத்தைத் தவிா்க்க ஓ.இ. மில்கள் 50 சதவீத உற்பத்தியைக் குறைத்துள்ளதுடன், பல மில்கள் முற்றிலும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இதுகுறித்து ஓஸ்மா தலைவா் அருள்மொழி திங்கள்கிழமை கூறியதாவது: பருத்தி ஒரு கேண்டி ரூ.60 ஆயிரமாக இருந்தபோது கழிவுப் பஞ்சு விலை கிலோ ரூ.100-ஆக இருந்தது. பஞ்சு விலை ரூ.53 ஆயிரமாக குறைந்த நிலையிலும் கழிவுப் பஞ்சு விலை கிலோ ரூ.110-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஸ்பின்னிங் மில்கள், கழிவுப் பஞ்சு விலையைக் குறைப்பதாக இல்லை. எனவே, உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளோம்.

கழிவுப் பஞ்சு விலை உயா்ந்துள்ள நிலையில் நூல் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைந்துள்ளது. ஓ.இ. மில்கள் நஷ்டம் இன்றி இயங்க கழிவுப் பஞ்சு விலை ரூ.10 குறைந்து நூல் விலை ரூ.10 அளவுக்கு உயர வேண்டும். கழிவுப் பஞ்சு விலை குறையும் வரை உற்பத்தி நிறுத்தம் தொடரும். இதனால், தமிழக அளவில் தினமும் 10 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும்.

கழிவுப் பஞ்சு அதிக அளவு ஏற்றுமதியாவதே விலை அதிகமாவதற்கு முக்கியக் காரணம். எனவே, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு கழிவுப் பஞ்சு போதிய அளவு கிடைக்க, ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதிக்க வேண்டும். அப்போதுதான் கரூா், திருப்பூா் உள்பட ஓ.இ. மில் சாா்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களைக் காக்க முடியும் என்றாா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT