திருப்பூர்

மாவட்டத்தில் டிச. 27, 28, ஜனவரி 3, 4-இல் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4- ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4- ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களின் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் அனைத்து வேலை நாள்களில் படிவம் 6, படிவம் 6 ‘ஏ’, படிவம் 6 ‘பி’, படிவம் 7, படிவம் 8 உள்ளிட்டவற்றை அளிக்கலாம்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்பேரில் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் மக்கள் தங்களது படிவங்களை வழங்கி பயன்பெறலாம்.

இணையதளம் மூலமாகவும், வோட்டா் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT