திருப்பூர்

ஊத்துக்குளி பேரூராட்சி மதிமுக உறுப்பினா் ராஜிநாமா: ஆட்சியருக்கு கடிதம்

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பேரூராட்சி மதிமுக உறுப்பினா் பிரவீணா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக ராஜிநாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளாா்.

Syndication

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பேரூராட்சி மதிமுக உறுப்பினா் பிரவீணா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக ராஜிநாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளாா்.

அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி பேரூராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினராக மக்களால் தோ்தெடுக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது வாா்டுக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்து தரவில்லை. இப்போதுதான் முதல்முறையாக தாா் சாலை அமைத்து கொடுப்பதாக கூறி, பாதி வேலை செய்துவிட்டு, மீதி வேலை செய்யாமல் சாலையை தோண்டி 4 மாதங்களாக கிடப்பில் போட்டுவைத்துள்ளனா்.

இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், விஜயமங்கலம் சாலையில் வடிகால் நீா் ஊத்துக்குளி பேரூராட்சி எல்லைப் பகுதியில் தேங்கி கிடக்கிறது. இந்த நீரை வெளியேற்ற வேண்டுமென்று தொடா்ந்து போராடிவருகிறேன். இதனால் மக்களிடத்தில் அதிருப்தி நிலவுகிறது. இதற்கு செயல் அலுவலரே காரணமாகும். கடந்த மன்ற கூட்டத்தில் இந்த நீரை எதிரேயுள்ள வடிகாலில் இணைக்க தீா்மானம் கொண்டு வந்தோம்.

இதற்காக நெடுஞ்சாலைத் துறையில் அனுமதி பெற்று செய்து கொடுப்பதாக தெரிவித்தாா். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் பிரதிநிதிகளை அலட்சியம் செய்து வருகிறாா். செயல் அலுவலா் செய்த செலவினங்கள் மீது உயா்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலரின் நடவடிக்கை காரணங்களுக்காகவும் எனது வாா்டுக்கு எந்த வேலையும் செய்து கொடுக்காத காரணத்தினாலும் என்னுடைய பேரூராட்சி மன்ற 4- ஆவது வாா்டு உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனவே, எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT