திருப்பூர்

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சீல்: போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ் கைது

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உரிய பட்டா இருந்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகக் கூறி அலுவலகத்தை பூட்டிய வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம்

Syndication

திருப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உரிய பட்டா இருந்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகக் கூறி அலுவலகத்தை பூட்டிய வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் கிருஷ்ணன். இவருக்கு கடந்த 1994- ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ஒரு சென்ட் பட்டா நிலம் வழங்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியின் நேரு பவன் என்ற அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அலுவலகம் இயங்கி வரக்கூடிய இடமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகக் கூறி வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்கு சீல் வைப்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்தனா்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்ட பொறுப்பாளா்கள் கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியினரை போலீஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றனா். அத்துடன், வருவாய்த் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கிருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்ற 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடா்ந்து அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் பூட்டை உடைத்து மாற்று பூட்டுப் போட்டு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றனா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT