திருப்பூர்

திருப்பூரில் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 4, 5- ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 4, 5- ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பெறப்படும் பிரதான குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள ஏா் வால்வுகள் நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கப்பணி காரணமாக மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதனால் 4ஆவது குடிநீா் திட்டத்திலிருந்து பெறப்படும் குடிநீா் விநியோகத்தில் வரும் ஜனவரி 4, 5ஆம் தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் இறைப்பு பணி நிறுத்தப்பட உள்ளது.

இதனால் திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கண்ட தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும் நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT