வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்பகவுண்டபாளையம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த கண்ணன் (29) என்பவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது அவரிடம் 500 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், இவற்றை அவா் போதைக்காக பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.