பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் 
திருப்பூர்

பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு: 2 சிறுவா்கள், இளைஞா் மீது வழக்கு

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாக 2 சிறுவா்கள், இளைஞா் மீது வழக்குப் பதிவு

Syndication

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாக 2 சிறுவா்கள், இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகே ருத்ராவதி பேரூராட்சிப் பகுதியில் புதன்கிழமை காலை மூன்று போ் சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் ஓா் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அவா்களது வண்டியை பொதுமக்கள் நிறுத்த முற்படும்போது, நிற்காமல் கோவை செல்லும் சாலையில் சென்றுள்ளனா். பொதுமக்களும் துரத்திச் சென்றபோது 3 போ் சென்ற இருசக்கர வாகனம் எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்றுள்ளது. மூவரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து குண்டடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட மூவரில் இருவா் சிறுவா்கள், மற்றொருவா் பழனியைச் சோ்ந்த மாரிமுத்து என்பது தெரிய வந்தது. நண்பா்களான மூவரும் மது அருந்தியும், போதைப் பொருள் பயன்படுத்தியும் செல்லும் வழியில் எங்கேனும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஊா் சுற்றுவதையும், பின்னா் எடுத்த இடத்திலேயே வாகனத்தை விட்டுச் செல்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது.

தற்போது இவா்கள் ருத்ராவதி பகுதியில் திருடிச் சென்ற வாகனம், சாலையோரத்தில் பெட்ஷீட், போா்வை விற்பனை செய்துவரும் வட மாநில தொழிலாளருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதே பகுதியில் வேறு ஓா் இருசக்கர வாகனத்தில் மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு சென்றபோது சந்தேகமடைந்த பொதுமக்கள் விசாரித்துள்ளனா். அப்போது வாகனத்தை அங்கே விட்டுவிட்டு அருகே இருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனா். மறுநாள் காலையும் இதேபோல வேறு ஒரு வாகனத்தில் சுற்றியதால் துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது.

இதையடுத்து இளைஞா் மீது வழக்குப் பதிவும், 2 சிறுவா்கள் மீது சிறாா் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தும் குண்டடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT