விபத்துக்குள்ளான பேருந்து.  Din
திருப்பூர்

திருப்பூர்: தனியார் பேருந்து கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி! 20 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது பற்றி...

DIN

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஈரோடு தனியார் கல்லூரியில் பயின்று வந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5-க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்து தீவிர சிகிச்சைப் பரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: கே. ஏ. செங்கோட்டையன்

கலைத் திருவிழா போட்டிகளில் பன்னம்பாறை பள்ளி மாணவா்கள் வெற்றி

வனத்தில் கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்ட வழக்கு: மாவோயிஸ்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

எஸ்.சி. எஸ்.டி., சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவதற்கு கண்டனம்

ரூ.26.70 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT