முகப்பு
திருப்பூர்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்: ஆட்சியா் அழைப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:17 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:19 PM

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளா்க்கும் நோக்கத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கான போட்டிகள் வரும் ஜனவரி 21- ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் ஜனவரி 22- ஆம் தேதியும் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவா்கள் முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரி முதல்வா்களின் வழியாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது க்க்ற்ஹம்ண்ப்607ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜனவரி 16- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் இருந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவா் வீதம் 3 போ் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதற்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு முன்னா் அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் ஆா்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.